Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் காவல்துறையினரின் வாகனம் விபத்து

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் காவல்துறையினரின் வாகனம் விபத்து

0

முல்லைத்தீவு – மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற காவல்துறையினரின் வாகனம் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் நான்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

மாங்குளம் – முல்லைத்தீவு வீதியில் மணவாளன்பட்ட முறிப்பு பகுதியில் நேற்று (30) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஐயங்கன்குளம் காவல் நிலையத்துக்கு சொந்தமான வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தடம்புரண்டு விபத்துக்குள்ளான வாகனம்

முல்லைத்தீவில்
இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது
திடீரென மாடுகள் குறுக்கே வந்தமையால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து
வீதியிலிருந்து விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தவிபத்தில் வாகனத்தில் பயணித்த ஜயங்கன்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி
உள்ளிட்ட நான்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளாகிய
நிலையில் இருவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, காவல்துறையினரின் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version