Home இலங்கை சமூகம் திருகோணமலை சம்பவம் தொடர்பில் காவல்துறை விளக்கம்!

திருகோணமலை சம்பவம் தொடர்பில் காவல்துறை விளக்கம்!

0

திருகோணமலை துறைமுக கடற்கரை வளாகத்திலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டமை குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் காவல்துறை ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறித்த புத்தர் சிலையுடன் கூடிய கூடாரம் கடலோர பாதுகாப்பு வலயத்திற்குள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு ஊடகங்கள் மூலம் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காவல்துறையிடம் முறைப்பாடு

கடந்த 16 ஆம் திகதி, திருகோணமலையில் உள்ள கடலோர பாதுகாப்பு வலயத்திற்குள் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விஹாரையின் பிக்குகள் மற்றும் நன்கொடையாளர்கள் குழு மூலம் அங்கீகரிக்கப்படாத குடிசையொன்று கட்டப்பட்டு வருவதாகவும், அங்கு புத்தர் சிலை வைக்கப்படுவதாகவும் திருகோணமலை துறைமுக காவல்துறையிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தாலும், அந்தக் குழுவினர் நிறுத்தாமல் கட்டுமானத்தைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் காரணமாக, அதனை அகற்றுமாறும் குறித்த கட்டுமானத்தை நிறுத்துமாறு கடந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி சுற்றுச்சூழல் அமைச்சினால் எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version