Home இலங்கை குற்றம் மோதிவிட்டு தப்பிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் : பொலிஸார் வலை வீச்சு

மோதிவிட்டு தப்பிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் : பொலிஸார் வலை வீச்சு

0

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள நானுஓயா சுரங்கப்பாதையில் குடிபோதையில்
பயணி ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்ய
நானுஓயா பொலிஸார் பல துறைகள் மூலம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நானுஓயா நகரத்திற்கு சென்ற நபர் ஒருவர், கடந்த (23) இரவு 7:30 மணியளவில் வீடு
திரும்பிக் கொண்டிருந்தபோது, ஹட்டனில் இருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற
மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த நபர் பலத்த காயமடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதி

விபத்து குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் சந்தேக நபர் தப்பிச்
சென்றுள்ளார்.

காயமடைந்த நபர் நானுஓயா பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து
நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version