வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னிடம் இலஞ்சம் வாங்கியதாக இளைஞன் ஒருவர் குற்றஞ் சுமத்தியுள்ளார்.
குறித்த இளைஞன் தலைக்கவசம் இன்றி வீதியில் செல்லும்போது அவரை மறித்து
இரண்டாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுவிட்டு அவரை அனுப்பியதாக குறித்த இளைஞர் கூறியுள்ளார்.
மேலும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்திற்கு வருபவர்களிடம்
அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்கள் வேண்டுகோள்
அத்தோடு, இலஞ்சம் பெற்றுவிட்டு ஒரு
தரப்பினருக்கு சார்பாக செயற்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினரை மேலும் மனக்
கசப்புக்கு உள்ளாக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே இவரின் செயற்பாடுகள் குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா
அதிபர் திலக் தனபால, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க,
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹா, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி கொஸ்தா ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
