Home இலங்கை சமூகம் மசாஜ் நிலைய பெண் ஊழியரை கடத்திய காவலர் கைது

மசாஜ் நிலைய பெண் ஊழியரை கடத்திய காவலர் கைது

0

ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் பணியாற்றும் பெண் ஒருவரை கடத்தி தாக்குதல் நடத்திய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பாணந்துறை அடுத்துள்ள வாத்துவை, தல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அங்குள்ள மசாஜ் நிலையம் ஒன்றுக்குச் சென்ற பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவின் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் , மசாஜ் பணியாளரை தகாத உறவுக்கு அழைத்துள்ளார்.

பெண் பணியாளர்

அதற்கு அவர் இணங்க மறுத்ததை அடுத்து குறித்த பெண் பணியாளரைத் தாக்கி, மசாஜ் நிலையத்தில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துள்ளார்.

அதன் பின்னர் மேற்குறித்த பெண் பணியாளரை கடத்தி வந்து வாத்துவை நகர மத்தியிலும் தாக்கியுள்ளார்.

சட்ட நடவடிக்கைகள்

சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்து தாக்குதல் மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மசாஜ் நிலையத்தில் கொள்ளையடித்த பணத்தில் இருந்து 27 ஆயிரம் ரூபாய் பணமும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version