நுவரெலியா நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியொருவர் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
நுவரெலியா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் தனிப்பட்ட உதவியாளராக செயற்படும் பிரதான இன்ஸ்பெக்டர் தர அதிகாரியொருவரே இவ்வாறு நுவரெலியாவில் இருந்து கண்டி பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மூன்றாம் திகதி இரவு குறித்த இன்ஸ்பெக்டர், தனக்கு கப்பம் தர மறுத்த உணவக உரிமையாளர் ஒருவரை நேரில் சென்று மிரட்டியுள்ளதுடன், சிங்களவர்களை மலடாக்கும் உணவு வகைகளை விற்பனை செய்வதாக கூறி உணவக உரிமையாளருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார்.
கண்டிக்கு தற்காலிகமாக இடமாற்றம்
இ்ந்தச் சம்பவத்தை பொலிஸர் மூடி மறைக்க முற்பட்ட போதும் ஊடகங்களில் வௌிவ்ந்த நிலையில், தற்போது குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணையொன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் கண்டிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்