Home இலங்கை சமூகம் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான விசாரணைக்கு உதவ நான்கு பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான விசாரணைக்கு உதவ நான்கு பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான விசாரணைகளுக்கு உதவ நான்கு பொலிஸ் அதிகாரிகளை பொலிஸ் திணைக்களம் நியமித்துள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவொன்றின் பிரகாரம் தனது பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

விசேட விசாரணை

இந்நிலையில் அவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கான விசேட விசாரணைக்குழுவொன்றை நாடாளுமன்றம் நியமித்துள்ளது.

குறித்த விசாரணைக்குழுவுக்கு உதவும் வகையில் பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் நான்கு உயர் பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version