Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் டிப்பர் வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு

கிளிநொச்சியில் டிப்பர் வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு

0

கிளிநொச்சியில் (Kilinochchi) டிப்பர் வாகணமொன்றின் மீது காவல்துறையினரால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி – தர்மபுரம் காவல் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில் பயணித்த டிப்பர் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் சமிக்ஞை

இரவு 9.30 மணியளவில் மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை புளியம்பொக்கனை சந்தியில்
வைத்து காவல்துறையினர் மறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.

இதன்போது காவல்துறையினரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் வாகனம் சென்ற நிலையில், காவல்துறையினரால் து்பாக்கி சூடு மேற்கொள்ளப்டப்டுள்ளது.

வாகன சாரதி 

காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்ட நிலையில், வாகன சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, மணல் மற்றும் டிப்பர் வாகனத்தை மீட்ட காவல்துறையினர் சாரதியை தேடி வருவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version