Home இலங்கை சமூகம் யூடியூபர் சுதத்த திலகசிறிக்கு பொலிஸ் பாதுகாப்பு

யூடியூபர் சுதத்த திலகசிறிக்கு பொலிஸ் பாதுகாப்பு

0

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளரான யூடியூபர் சுதத்த திலகசிறிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்‌சவை பதவிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் முன்னின்று செயற்பட்டவர்களில் சுதத்த திலகசிறியும் உள்ளடங்கியிருந்தார்.

அக்காலத்தில் அவர் சிங்கள தொலைக்காட்சித் தொடர்களின் சாதாரண நடிகராக அறியப்பட்டிருந்தார்.

கோட்டாபயவின் வீழ்ச்சி

எனினும் அவரது கருத்துக்கள் காரணமாக வெகுவிரைவில் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருந்தார்.

கடந்த 2022ம் ஆண்டில் கோட்டாபயவின் வீழ்ச்சியுடன் பொதுஜன பெரமுணவை விட்டும் விலகிக் கொண்ட சுதத்த திலகசிறி, அதன் பின்னர் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

இந்நிலையில் இன்றைய தினம் தொடக்கம் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் அவரது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version