Home இலங்கை சமூகம் இந்த பெண்ணை பார்த்துள்ளீர்களா! மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

இந்த பெண்ணை பார்த்துள்ளீர்களா! மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

0

அம்பாறை மாவட்டம் – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் ஒருவரை கண்டுப்பிடிக்க பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த பெண் கடந்த திங்கட்கிழமை (10) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடு

குறித்த முறைப்பாட்டின் படி, சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காணாமல் போன பெண்ணை மூதூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளதாக மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணை

காணாமல் போன பெண்ணை அழைத்து சென்ற நபர் கல்முனை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஐஸ் கிரீம் வியாபாரம் செய்பவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அன்றைய தினம் குறித்த நபரால் அழைத்துச் செல்லப்பட்ட 3 பிள்ளைகளின் தாயாரான இப்பெண் இன்னும் வீடு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் தொடர்பில் ஏதாவது அறிந்திருந்தால் உடனடியாக, 0767824592, 0753251281
என்ற தொலைபேசி இலக்கத்திற்க்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.   

NO COMMENTS

Exit mobile version