Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் போராட்டத்தில் குதித்த கனரக வாகன சாரதிகள்

கிளிநொச்சியில் போராட்டத்தில் குதித்த கனரக வாகன சாரதிகள்

0

டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி ஓடும் கனரக வாகனங்கள் டீசலுக்கு
மாறுவதற்கு ஒருவாரம் அவகாசம் தருமாறு கோரி வாகன சாரதிகள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாமையில் முன்னெடுத்துள்ளனர்.

கால அவகாசம்

அத்தோடு, மண்ணெண்ணெய் பயன்படுத்தும்
அனைத்தும் வாகனங்களையும் பொலிஸார் கண்டறியுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கனரக சாரதிகளுடன்
கலந்துரையாடியதைத் தொடர்ந்து ஒரு வாரகால அவகாசத்திற்கு சம்மதம்
தெரிவிக்கப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version