Home இலங்கை குற்றம் நள்ளிரவில் பெண்களுடன் இணைந்து ஆண்களின் அட்டகாசம் – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

நள்ளிரவில் பெண்களுடன் இணைந்து ஆண்களின் அட்டகாசம் – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

0

கம்பஹா, பியகம பகுதியில் உள்ள ஹோட்டலில் இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தொடங்கிய விருந்து நேற்று காலை சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அங்கு 29 பேரை கைது செய்ததாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் அதிக சத்தத்தை எழுப்பிய பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் குறித்த ஹோட்டலில் விருந்து நடைபெறுவதாக 119 என்ற பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

விருந்து

அதற்கமைய, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சத்தத்தை குறைக்குமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அதனை கண்டுககொள்ளாமல் விடியும் வரை அதிக சத்தத்துடன் விருந்து நடத்தப்பட்டுள்ளது.

இதனால் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் மூன்று பேர் போதைக்கு பயன்படுத்தப்படும் போதைப்பொருட்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட குழுவில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version