காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்தப் பெண் 2023.12.30ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
59 வயதான விக்கிரமசிங்க ஆராச்சிகே துலானி என்ற இந்தப் பெண், உறவினர்களால் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுமக்களிடம் வேண்டுகோள்
கொழும்பின் புறநகர் பகுதியான மத்தேகொட தேசிய வீட்டுவசதி வளாகத்தில் வசித்து வந்த இந்தப் பெண் சுமார் 5 அடி உயரமும் சராசரி உடலமைப்பும் கொண்டவர்.
இந்தப் பெண் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 8592207 அல்லது 011 2783776 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
