Home இலங்கை சமூகம் பொதுமக்களிடம் அவசர உதவி கோரும் பொலிஸார்!

பொதுமக்களிடம் அவசர உதவி கோரும் பொலிஸார்!

0

காணாமல் போன இளைஞனைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களின் உதவியை கோரி பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த இளைஞன் கடந்த 17 ஆம் திகதி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவரது தந்தை களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்

காணாமல் போன இளைஞர், தெனிபிட்டிய, எலுவாவல, மகாதெனிய பகுதியை சேர்ந்த 29 வயதான பொல்வத்த கொல்லகே நவோத் கிம்ஹான் என்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,காணாமல் போன இளைஞன் சுமார் 5 அடி 5 அங்குல உயரம், மெலிந்த உடல் அமைப்பு, குட்டையான முடி மற்றும் தாடி கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இளைஞன் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

1. தலைமையக காவல் ஆய்வாளர் பொலிஸ் நிலையம் களுத்துறை தெற்கு :-
071-8591691

2. குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் நிலையம் களுத்துறை தெற்கு:- 071 – 8594360

NO COMMENTS

Exit mobile version