Home இலங்கை குற்றம் யாழில் சட்டவிரோத மணலுடன் வந்த கன்ரர் வாகனம் பொலிஸாரால் கைப்பற்றல்

யாழில் சட்டவிரோத மணலுடன் வந்த கன்ரர் வாகனம் பொலிஸாரால் கைப்பற்றல்

0

யாழ். அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக
கன்ரர் வாகனத்தை இன்று(13) யாழ்ப்பாண பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மேலதிக விசாரணை

அரியாலைப் பகுதியில் சட்ட விரோத மணல் கடத்தல் இடம் பெறுவதாக யாழ்ப்பாண பிரதான
பொலிஸ் பரிசோதகர் பாலித்த செனவிரட்னவினவுக்கு தகவல் கிடைத்தது.

அவரது பணிப்புரைக்கு அமைவாக குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் இலக்கத்
தகடற்று மணல் ஏற்றிக் கொண்டிருந்த குறித்த வாகனத்தை கைப்பற்றினர்.

சம்பவத்தில் வரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version