Home இலங்கை சமூகம் யாழில் ஆலயமொன்றின் சட்டவிரோத ஒலிபெருக்கிகளை கைப்பற்றிய காவல்துறையினர்

யாழில் ஆலயமொன்றின் சட்டவிரோத ஒலிபெருக்கிகளை கைப்பற்றிய காவல்துறையினர்

0

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆலயமொன்றில் கும்பாபிஷேகத்தையொட்டி சட்டவிரோதமாக பொறுத்தப்பட்டிருந்த 30 இற்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆலயமொன்றில் கும்பாபிஷேகத்தையொட்டி
30 இற்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் மூலம் ஒலி அமைப்பு
மேற்கொள்ளபட்டிருந்தது.

இந்நிலையில், இது குறித்து யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்
பிரதீபனுக்கு பொதுமக்கள் இது குறித்து முறையிட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு உத்தரவு

அதனைதொடர்ந்து கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ் பிராந்திய
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு அரசாங்க அதிபர் இது குறித்து நடவடிக்கைகளை
உடன் எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

 

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சட்டத்திற்கு விரோதமான முறையில்
அமைக்கப்பட்டு அதிகளவு ஒலி அமைப்பை கொண்ட 30 ஒலிபெருக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்துள்ள நிலையில் ஏற்கனவே
அதிகளவு ஒலி எழுப்படும் பொழுது சட்ட நடவடிக்கைகள் யாழ் மாவட்டத்தில்
எடுக்கப்படும் என மாவட்ட சுற்றாடல் குழு கூட்டத்தில் தீர்மானம்
எடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version