Home இலங்கை குற்றம் அனுமதியின்றி மாடுகளை ஏற்றிவந்த வாகனம் பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு

அனுமதியின்றி மாடுகளை ஏற்றிவந்த வாகனம் பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு

0

வவுனியா, செட்டிகுளம் – சிப்பிக்குளம் பகுதியில் முறையான அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை
ஏற்றி வந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதி கைது
செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை கைப்பற்றிய பொலிஸார்

குறித்த பகுதியில் பயணித்த பாரவூர்த்தி
ஒன்றை சோதனை செய்த போது முறையான அனுமதியின்றி மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மாடுகள் மீட்கப்பட்டதுடன், வாகனத்தை கைப்பற்றிய பொலிஸார் அதனை செலுத்தி வந்த சாரதியையும் கைது
செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version