மாந்தை கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை தொடர்பில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் வைத்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு நட்டாங்கண்டல் காவல் நிலையத்தின் இரண்டாம் நிலை அதிகாரிகள் உடந்தையாக இருப்பது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமர்வில் பிரதேச செயலாளரினால் பேரிடர் கால அவசர தேவைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
பேரிடர் கால அவசர தேவை
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிகரனால் பேரிடர் கால அவசர தேவைகள் குறித்து நாடாளுமன்றில் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டது.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு பிரதேச சபையால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்கு காவல்துறையின் உதவி கோரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிக்கைகள் மற்றும் தகவல்களை ஆங்கிலத்தில் வெளியிடுவது குறித்தும், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் தமிழ் மொழியில் வெளியிடவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
