தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் தகராறில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி சூரியகந்தவே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கைது
நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார தன் முகத்தில் கசிப்பு அடங்கிய பக்கெட்டினால் தாக்கினார் என ஏற்கனவே மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் குறிப்பிட்ட நிலையில் கைது இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர், தனது மாமனாரின் நிலத்தில் கஞ்சா பயிரிட்டமை தொடர்பில் சோதனை நடத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையிலே, கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை நேற்று (22.12.2025) பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
