இலங்கை பொலிஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளம் ஊடுருவல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த தளத்தை அணுக முடியாதநிலையில், அங்கீகரிக்கப்படாத உள்ளடக்கம் அதில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலின் பிரகாரம் இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் தற்போதைக்கு வேறுதரப்பொன்றின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வேறொரு தரப்பின் காணொளிகள்
இந்தநிலையில், குற்றவாளிகளை அடையாளம் காணவும் கணக்கின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும் அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையே இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் யூடியூப் தளத்தில் தற்போதைக்கு ‘Brad Garlinghouse’ எனும் பெயர் கொண்ட வேறொரு தரப்பின் காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த யூடியூப் சேனல் சுமார் 83 ஆயிரம் பின்பற்றுபவர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் – அனாதி