Home முக்கியச் செய்திகள் யாழில் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிள் செலுத்தும் காவல்துறையினர் !

யாழில் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிள் செலுத்தும் காவல்துறையினர் !

0

கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த காவல்துறையினர் தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

குறித்த சம்பவம் அச்சுவேலி காவல்துறை பிரிவுபகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்றையதினம் பி.ப 3.27 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

அச்சுவேலி பகுதி

”நிலாவரை சந்தியில் இருந்து அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரண்டு
காவல்துறையினர் பயணித்ததுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய காவல்துறை
உத்தியோகத்தர் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

வாகனங்களில் பயணிக்கும்போது கைபேசி பாவனையில் ஈடுபடுவது என்பது சட்டத்திற்கு
முரணான விடயமாகும்.

இந்நிலையில் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய காவல்துறையினரே
பாதுகாப்பற்ற முறையில் கைபேசியில் உரையாடியவாறு பயணித்தமை மக்கள் மத்தியில்
விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version