Home இலங்கை சமூகம் ஹெலிக்கொப்டரில் இருந்து கடலில் வீசியெறியப்பட்ட ஊடகவியலாளர்! மூடி மறைக்கப்பட்ட கொலை பின்னணி

ஹெலிக்கொப்டரில் இருந்து கடலில் வீசியெறியப்பட்ட ஊடகவியலாளர்! மூடி மறைக்கப்பட்ட கொலை பின்னணி

0

இலங்கையை பொறுத்தமட்டில் தங்களது சுயலாபத்திற்காகவும் தமது நற்பெயரை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அரசியல் பின்னணியில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவது என்பது மிகவும் சாதாரண ஒரு விடயமாகும்.

இதில் மூன்று சிங்கள ஊடகவியலாளர்கள், ஒரு முஸ்லிம் ஊடகவியலாளர் மற்றும் 30 தமிழ் ஊடகவியலாளர்கள் என இலங்கையில் 34 ஊடகவியலாளர்கள் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அரசியல் தலைவர்களை கேள்வி கேட்பவர்கள் முதற்கொண்டு, அரசியலில் மூடி மறைக்கப்படும் ஊழல்களை வெளிகொண்டு வருபவர்கள் வரை அனைவரும் பாரபட்சம் இன்றி இலங்கையில படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் அரசியல் தலைமைகளின் குடும்ப அங்கத்தவர்கள் குறித்து செய்தி வெளியிட்டமைக்கான எல்லாம் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு கொடூர வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது.

இதில் ஒரு பக்கமாக ரிச்சர்ட் டி சொய்சா எனும் பிரபல ஊடகவியலாளர், 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி கடத்தி செல்லப்பட்டு ஒரு நாள் முழுவதும் கொடூரமான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அவருடைய கொலைக்கு பலதரப்பட்ட காரணங்கள் வெளியாகி இருந்தாலும், அப்போதைய சிறிலங்காவின் அரச தலைவராக இருந்த ரணசிங்க பிரமேதாசவின் (
Ranasinghe Premadasa) மனைவி ஹேமா பிரேமதாச (Hema Premadasa) குறித்து அவர் வெளியிட்ட ஒரு செய்தி காரணமாகத்தான் இப்படுகொலை நேர்ந்தாகவும் ஒரு காரணம் வெளியாகி இருந்தது.

இது தொடர்பிலும், ஹேமா பிரேமதாச குறித்து அவர் வெளியிட்ட செய்தி என்ன, கொலைக்கான பிண்ணனி, இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்கள் மற்றும் பலதரப்பட்ட சிறிலங்கா அரசியலின் மறைக்கப்பட்ட உண்மைகள் குறித்து ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,          

https://www.youtube.com/embed/SnAI61x2YKk

NO COMMENTS

Exit mobile version