நாட்டின் மலையக பகுதியை கடுமையாக பாதித்த மழை வெள்ளம் தப்போது ஏனைய பகுதிகளில்
பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பிரதான வீதி மூடல்
அந்த வகையில் பொலன்னறுவையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு நிலைமை
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சோமாவதிய – சுங்காவில பிரதான வீதியை மீண்டும் தற்காலிகமாக
மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர் சுஜந்த ஏகநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
