Home இலங்கை சமூகம் அரசாங்கத்தின் முடிவால் இதுவே நடந்தது – அகில இலங்கை சிறு கைத்தொழில்கள் சங்கம்

அரசாங்கத்தின் முடிவால் இதுவே நடந்தது – அகில இலங்கை சிறு கைத்தொழில்கள் சங்கம்

0

பொலித்தீன் பைகள், குறிப்பாக ஷொப்பிங் பைகள், இலவசமாக விநியோகிக்கப்படுவதைத்
தடை செய்யும் அரசாங்கத்தின் முடிவு உள்ளூர் பொலித்தீன் கைத்தொழிலையோ அல்லது
அதன் உற்பத்தியையோ பாதிக்கவில்லை என அகில இலங்கை சிறு கைத்தொழில்கள் சங்கம்
தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷன குமார கூறுகையில், இந்தத் தடை
சிறப்பங்காடிகளும் கடைகளும் கூடுதல் இலாபத்தை ஈட்டவே உதவியுள்ளது என குற்றம்
சாட்டினார்.

நடைமுறைக்கு ஒவ்வாத முடிவு

மேலும், பெரும்பாலான நுகர்வோர் பொருள் கொள்வனவின்போது பொருட்களை எடுத்துச்
செல்ல இன்னும் பொலித்தீன் பைகளையே நம்பியிருப்பதால், இந்த முடிவு நடைமுறைக்கு
ஒவ்வாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் விதிமுறைகள் இருந்தபோதிலும், பெரும்பாலான கடைகள் தொடர்ந்து
இலவசமாகவே பைகளை வழங்குவதால், இந்த துறையின் விற்பனை அல்லது உற்பத்தி
மட்டத்தில் எந்தவொரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியும் ஏற்படவில்லை.

உத்தரவு

தேவலாபுர காவல்துறை பிரிவில் சுமார் 1,200 உற்பத்தியாளர்கள் இந்த துறையில்
ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயர்மன்றத்தின் உத்தரவின் பிரகாரம், கடந்த நவம்பர் 1ஆம் திகதி முதல்
பொலித்தீன் பைகளுக்குக் கட்டணம் அறவிடும் நடைமுறை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version