Home இலங்கை சமூகம் பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் பொலித்தீனிற்கு தடை..!

பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் பொலித்தீனிற்கு தடை..!

0

பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் மூன்று மாதத்திற்குள் பொலித்தீன் பாவனையை முற்றாக
கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம்(29.08.2025) நடைபெற்ற நிலையில், குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்போது, பருத்தித்துறை நகர சபையின் உக்காத கழிவுப் பொருட்களை பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட இடத்தில் கொட்டுவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், மூன்று மாத
காலங்களுக்கு சுழற்சி முறையில் அனுமதி கொடுப்பதாகவும் ஒரு உழவு இயந்திர
பெட்டி குப்பைக்கு ரூபா 5000 அறவிடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பனை விதை நடுகை மாதம்

அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் மாதத்தை பனை விதை
நடுகை மாதமாக பிரகடனப்படுத்தி 10000 பனை விதைகளை நாட்டுவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய சபை அமர்வில் 20 உறுப்பினர்களில் 18 உறுப்பினர்கள்
கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version