Home இலங்கை சமூகம் சர்வதேச திரைப்பட விழாக்களில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் ”பொம்மை“ திரைப்படம்

சர்வதேச திரைப்பட விழாக்களில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் ”பொம்மை“ திரைப்படம்

0

நமது கதைகளை சொல்ல வேண்டுமென்ற முயற்சியில் நமக்கான சினிமா மெதுவாக முளைத்து வளரத் தொடங்கியிருக்கிறது.

இந்த வரிசையில் ”பொம்மை“ திரைப்படம் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

இந்தத் திரைப்படத்தை ஐபிசி தமிழ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.

திரைப்படம்

நவயுகா குகராஜா, யசோதா , திருமலை பிரணவன், சுகிர்தன் கிறிஸ்துராஜா,ரெக்சன் விக்கி, மல்லிகா கீர்த்தி, ஐங்கரன் ஜெனொஷியா போன்ற இலங்கையின் திறமை மிக்க நடிக நடிகைகளின் கூட்டு முயற்சியில் இத் திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இது சுவீடன் நாட்டின் சேர்ந்த லுலீயா சர்வதேச திரைப்பட விழாவிலும் போடன் சர்வதேச திரைப்பட விழாவிலும் தமிழகம் சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை வென்றுள்ளது.

அத்தோடு சினி ரோயல் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version