Home இலங்கை சமூகம் தியாகி பொன் சிவகுமாரனின் 51 வது நினைவுதினம் இன்று

தியாகி பொன் சிவகுமாரனின் 51 வது நினைவுதினம் இன்று

0

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் (Pon Sivakumaran) 51வது நினைவுதினம் இன்று இடம்பெற்றது.

யாழ். (Jaffna) உரும்பிராய் சந்திப் பகுதியில் அமைந்துள்ள பொன்
சிவகுமாரனின் நினைவு தூபியில் இன்று (06) காலை குறித்த நிகழ்வு நடைபெற்றது.

நினைவேந்தல் நிகழ்வின் போது சுடர் ஏற்றப்பட்டு, பொன் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை
அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டோர்

இந்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்
தேவானந்தா, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் தர்மலிங்கம்
சித்தார்த்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்
சி.வி.கே.சிவஞானம், பொன் சிவகுமாரனின் சகோதரி உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டிருந்தனர்.

https://www.youtube.com/embed/mCi4MJy5szQ

NO COMMENTS

Exit mobile version