Home இலங்கை சமூகம் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவரின் தந்தையின் சிலை உடைப்பு: பொலிஸில் முறைப்பாடு

நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவரின் தந்தையின் சிலை உடைப்பு: பொலிஸில் முறைப்பாடு

0

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பொன் சுதனின்
தந்தையின் சிலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள இராவணன் வனப்பகுதியில் வேட்பாளர் பொன்
சுதனால் அவரது தந்தையின் சிலை நிறுவப்பட்டிருந்துள்ளது.

இந்த சிலையின் முகப்பகுதியை
விசமிகள் சிலர்
கடந்த 21ஆம் திகதி உடைத்துள்ளதாக பொன் சுதன் தெரிவித்துள்ளார்.

அரசியல் முரண்பாடு 

சம்பவம் அறிந்து உடனடியாக கண்காணிப்பு கமராவை ஆய்வு செய்த போது சம்பவ தினம்
அன்று சிசிரிவி கமரா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தன்மேல் இருக்கும் அரசியல் முரண்பாட்டால் இந்த சம்பவம்
இடம்பெற்றிருக்கலாம் எனவும், திடீரென சிசிரிவி கமரா நிறுத்தப்பட்டுள்ளது எனவும் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொன் சுதன் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளதுடன் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version