Home இலங்கை அரசியல் வசந்த கரன்னகொடவுக்கு சிறை தண்டனை கோரிய சரத் பொன்சேகா

வசந்த கரன்னகொடவுக்கு சிறை தண்டனை கோரிய சரத் பொன்சேகா

0

மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களைக் கடத்திக் கப்பம் கோரிப் படுகொலை
செய்தமைக்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட போன்றவர்கள்
தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வசந்த கரன்னகொட, சவேந்திர சில்வா போன்ற தளபதிகளுக்கு சர்வதேசத்தால் தடைகள்
விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவால் தடை

ஆனால், சரத் பொன்சேகாவுக்குத் தடைகள் விதிக்கப்படவில்லை
என மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பேச்சாளர் கூறியதை அவதானித்தேன்.

அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், அமெரிக்காவால் முதன்முதலில்
எனக்குத்தான் தடைகள் விதிக்கப்பட்டன.

இந்தத் தடைகள் காரணமாக, நான் இன்றளவும்
அமெரிக்காவுக்குச் செல்ல முடியாது.

இழிவான செயல்

ஆனால், ராஜபக்சர்களுக்கு தடைகள் இல்லை, அவர்கள் சுதந்திரமாக அமெரிக்காவுக்குச் சென்று வருகின்றனர்.   

அத்துடன், கரன்னகொட போன்று இழிவான செயல்களில் நான் ஈடுபட்டதில்லை.

மாணவர்கள்
உள்ளிட்ட 11 இளைஞர்களைக் கடத்திக் கப்பம் கோரிப் படுகொலை செய்தது கரன்னகொட
என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

எனவே, அத்தகைய நபர்களுக்கு பொருளாதாரத்
தடைகள், பயணத் தடைகள் மட்டும் போதாது, அவர்கள் சிறைகளில் இருக்க
வேண்டியவர்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version