Home சினிமா புதிய நடனப் பள்ளியை திறந்துள்ள மாஸ்டர் சாண்டி.. எங்கே தெரியுமா, கலந்துகொண்ட சின்னத்திரை பிரபலங்கள்

புதிய நடனப் பள்ளியை திறந்துள்ள மாஸ்டர் சாண்டி.. எங்கே தெரியுமா, கலந்துகொண்ட சின்னத்திரை பிரபலங்கள்

0

சாண்டி

கடந்த 2005ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட சீசன் ஒன்றின் மூலம் நடன இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் சாண்டி மாஸ்டர்.

டான்ஸ் மட்டுமே வாழ்க்கை என்று இருந்த இவருக்கு டான்ஸ் மூலம் சினிமா துறையிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ரீ-ரிலீஸ் ஆகப்போகும் விஜய்யின் சச்சின் திரைப்படம்.. ப்ரீ புக்கிங் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

அதேபோல் தண்ணில கண்டம் எனும் திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் களமிறங்கினார்.
பின் 2019ம் ஆண்டு பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு குருநாதா குருநாதா என செம ஜாலியாக விளையாடி இருந்தார்.

புதிய ஸ்டூடியோ

சில்வியா என்பவரை மறுமணம் செய்துகொண்ட சாண்டிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அண்மையில் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் சாண்டியின் மகள் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்து தனது அப்பா குறித்து பேசியது எமோஷ்னலாக இருந்தது.

இந்த நிலையில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி குறித்து ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது. அதாவது அவர் மொகப்பேரில் புதிய நடனப்பள்ளியை துவங்கியுள்ளார். ஓபனிங் நாள் அன்று சில சின்னத்திரை பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version