Home இலங்கை சமூகம் போலி துப்பாக்கி மற்றும் போதைப்பொருளுடன் பிரபல பாடகர் கைது

போலி துப்பாக்கி மற்றும் போதைப்பொருளுடன் பிரபல பாடகர் கைது

0

மாதவ் பிரசாத் என்று அழைக்கப்படும் ‘மதுவா’ என்ற ராப் பாடகர், போலி கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

ஆறு பேர் கொண்ட குழு, போதைப்பொருள் மற்றும் கைத்துப்பாக்கியை வைத்திருந்து போதைப்பொருள் உட்கொள்வதைக் காட்டும் முகநூல் காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், ஹோமாகம பகுதியில் உள்ள வீட்டு வளாகத்தில் சந்தேகநபரை கஹதுடுவ காவல்துறையினர கைது செய்துள்ளனர். 

குழு விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலும் விசாரணை நடத்தியதில், அவர் தனது முகநூல் பயனர் எண்ணிக்கையை அதிகரிக்க போதைப்பொருள் உட்கொள்ளும் வீடியோக்களை பதிவேற்றியிருப்பது தெரியவந்தது. 

சந்தேகநபரிடமிருந்து 20 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 35 கிராம் ஹஷீஷ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 26 வயதுடைய இந்த சந்தேகநபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

கஹதுடுவ காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் தமித பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் ரஜித குருசிங்க உள்ளிட்ட குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

NO COMMENTS

Exit mobile version