Home இலங்கை சமூகம் 24ஆம் திகதி முதல் புதிய நடைமுறை – வங்கி அட்டை வைத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

24ஆம் திகதி முதல் புதிய நடைமுறை – வங்கி அட்டை வைத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

0

இலங்கையில் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த வாய்ப்பு நாளை மறுதினம் (24) முதல் பயணிகளுக்கு கிடைக்கவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழிநுட்ப வழிகாட்டுதலின் கீழ், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் குறித்த திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

ஆரம்பிக்கப்படவுள்ள திட்டம்

இதன்படி குறித்த திட்டமானது மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தகவலின்படி, இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் சுமார் 20 வழித்தடங்கள் உள்ளடக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கட்டண முறை

இதில் 3 முக்கிய மாகாணங்களுக்கு இடையேயான வழித்தடங்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

காலி,

மாத்தறை மற்றும் பதுளை நோக்கிச் செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இந்த டிஜிட்டல் கட்டண முறையை அனுபவிக்கும் முதல் குழுவினராக இருப்பார்கள்.

இந்தத் திட்டத்திற்காக, ஐந்து முன்னணி அரச மற்றும் தனியார் வங்கிகள் ஏற்கனவே தமது ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version