Home இலங்கை சமூகம் வேலை நிறுத்தம் இன்றுமுதல் : தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

வேலை நிறுத்தம் இன்றுமுதல் : தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

0

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று (17) முதல் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version