Home இலங்கை அரசியல் மத்திய தபால் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் 15 லட்சம் கடிதங்கள் மற்றும் பார்சல்கள்

மத்திய தபால் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் 15 லட்சம் கடிதங்கள் மற்றும் பார்சல்கள்

0

தங்கள் கோரிக்கைகளுக்கு இறுதி தீர்வு காணப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மத்திய தபால் நிலையத்தில் சுமார் 15 லட்சம் கடிதங்கள் மற்றும் பார்சல்கள் தேக்கமடைந்துள்ளன.

கூடுதல் நேரக் கட்டணம் தொடர்பாக நிறுவனங்களின் இயக்குநர் நாயகம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கமைய, செயல்பட வேண்டிய அவசியம், அனைத்து நிர்வாக மற்றும் கணக்கியல் அலுவலக அதிகாரிகளும் தங்கள் வருகை மற்றும் புறப்பாட்டை கைரேகை இயந்திரங்களை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளிட்ட 19 பிரச்சினைகளை முன்னிறுத்தி தபால் ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

வேலைநிறுத்தம்

வேலைநிறுத்தம் காரணமாக பல தபால் நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதேவேளை, இதுவரை தங்கள் பிரச்சினைகள் குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்

NO COMMENTS

Exit mobile version