2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கிளிநொச்சி (Kilinochci) மாவட்டத்தில் அஞ்சல்
வாக்குச்சீட்டுக்களைப் பொதியிடும் குழு உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, நேற்றைய தினம் (23) மாலை 2.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட
செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கடமை – பொறுப்புக்கள்
இதன்போது, கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ், ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு கடமைகளில் ஈடுபடும்
உத்தியோகத்தர்களுக்கான
கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக விளக்கமளித்தார்.
மேலும், இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி ) இ. நலாஜினி, மாவட்ட செயலக
பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து
கொண்டுள்ளனர்.