ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் வவுனியா காவல்துறையினர் தங்களது வாக்குகளை அளித்துள்ளனர்.
தபால் மூலமான வாக்களிப்புக்கள் இன்று 04ம் திகதி முதல் 06ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மேலும், மாவட்டச் செயலகம், தேர்தல்கள் ஆணைக்குழு, காவல்துறையினர் தமது தபால் மூல வாக்குகளை வாக்களிக்க விசேட தினமாக இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு
இதற்கமைய, வவுனியா காவல்துறையினர் தங்களது தபால் மூல வாக்குகளை வவுனியா தலைமையக காவல்நிலையத்தில் வாக்களிக்கின்றனர்.
அத்துடன், வவுனியா மாவட்டத்தில்128,585, மன்னார் மாவட்டத்தில் 90,707, முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர் உள்ளடங்கலாக வன்னி தேர்தல் தொகுதியில் வாக்களிக்க 306,081 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.