Home இலங்கை சமூகம் போராட்டத்தில் குதிக்கவுள்ள தபால் திணைக்கள ஊழியர்கள்

போராட்டத்தில் குதிக்கவுள்ள தபால் திணைக்கள ஊழியர்கள்

0

நாட்டிலுள்ள தபால் திணைக்கள ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த போராட்டத்தை இன்று (12) நள்ளிரவு முதல் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகவீன விடுமுறை

இது குறித்து மேலும் தெரியவருகையில், ஊழியர்களை ​சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், ஊழியர் பற்றாக்குறை காரணமாக தபால் திணைக்களத்தின் (Sri Lanka Postal Department) செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.

Source: https://ibctamil.com/article/postal-workers-begin-sick-leave-protest-today-1718184552

NO COMMENTS

Exit mobile version