Home இலங்கை சமூகம் இலங்கையில் வறுமைக்கோட்டில் வாழும் மக்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் வறுமைக்கோட்டில் வாழும் மக்கள் தொடர்பில் வெளியான தகவல்

0

நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில், பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக கடந்த ஆண்டில் 29.5 வீதமாக மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிராமிய மக்கள்

அத்தோடு கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் போன்ற விடயங்களில் நாட்டின் 55.7 வீதமானவர்கள் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை கல்வி, பாடசாலை வரவு, நோய் நிலைமைகள், சுகாதார வசதி பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை, வீடுகள், குடிநீர் மற்றும் சமையல் எரிபொருள் வசதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணிகள் உரிய முறையில் கிடைக்கப் பெறாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு வசதி குறைந்தவர்கள அதிகளவில் கிராமிய பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் சுமார் 82 வீதமான கிராமிய மக்கள் இவ்வாறு வறுமையில் வாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version