Home இலங்கை சமூகம் லங்காபே நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டுத் தளத்தில் மின் தடை : சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

லங்காபே நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டுத் தளத்தில் மின் தடை : சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

0

லங்காபே (LankaPay) நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டுத் தளத்தில் ஏற்பட்ட
எதிர்பாராத மின்தடையின் காரணமாக, பல அத்தியாவசிய கட்டண மற்றும் டிஜிட்டல்
பரிவர்த்தனை சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த இடையூறு காரணமாக, வங்கிகளுக்கு இடையேயான ATM பரிவர்த்தனைகள், CEFTS ஊடாக
வங்கிகளுக்கு இடையேயான நிதிப் பரிமாற்றங்கள், LPOPP அரசாங்க கொடுப்பனவுகள்,
JustPay, லங்காபே அட்டைகள், GovPay மற்றும் LANKAQR அமைப்புகள் ஆகியவை
பாதிக்கப்பட்டுள்ளன.

தற்காலிகமாக நிறுத்தம்

அத்துடன், LankaSign டிஜிட்டல் சான்றிதழ் அதிகாரசபையும் தற்காலிகமாக
இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள லங்காபே, சேவைகளை கூடிய விரைவில்
மீட்டெடுக்க தமது தொழில்நுட்பக் குழுக்கள் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும்,
இதனால் நுகர்வோர் மற்றும் பங்குதாரர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்புக்
கோருவதாகவும் தெரிவித்துள்ளது.

அமைப்புகள் முழுமையாகச் செயற்படத் தொடங்கியவுடன், தமது அதிகாரப்பூர்வ வழிகள்
மூலம் மேலதிக அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அந்த நிறுவனம்
உறுதியளித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version