Home இலங்கை சமூகம் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை

0

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு (Colombo) உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் விழுந்ததால் மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சார சபை கோரிக்கை

கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலான கொழும்பு-காலி பிரதான வீதியிலும், கிராண்ட்பாஸ் பகுதியைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் மரங்கள் விழுந்து சேதமடைந்தன. 

கிராண்ட்பாஸில் உள்ள செயிண்ட் ஜோசப் வீதியில் பெரிய மரம் ஒன்று விழுந்ததில்அருகிலுள்ள ஆறு வீடுகள் பாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபை

இவ்வாறான சூழலில் நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், மின் தடை பற்றிய முறைப்பாடுகளை 1987 என்ற அவசர இலக்கத்தின் மூலமாகவோ அல்லது மின்சார சபையின் தொலைபேசி செயலி ஊடாகவோ அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version