Home இலங்கை சமூகம் குறைந்த விலையில் மின்சாரம் : கைச்சாத்தப்பட்ட ஒப்பந்தம்

குறைந்த விலையில் மின்சாரம் : கைச்சாத்தப்பட்ட ஒப்பந்தம்

0

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் (PPA) கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த மின் நிலையத்தின் கட்டுமானம் மற்றும் உரிமை செயல்பாட்டை சஹஸ்தனவி நிறுவனம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மின்சார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மின்சார சபை

இதன்படி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் உரிமை இலங்கை மின்சார சபைக்கு மாற்றப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் உள்ள வீட்டு மற்றும் வணிக நுகர்வோருக்கு நம்பகமான மற்றும் குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கும் நோக்கத்துடன் இது செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version