Home உலகம் அமெரிக்காவில் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவில் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அலெட்டியன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளாதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (9.12.2024) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

ஆங்கரேஜுக்கு மேற்கே 1,350 மைல் (2,200 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள அடாக் – அம்சிட்கா மற்றும் கிஸ்கா தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நில அதிர்வின் தன்மை

நில அதிர்வானது பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், அதிர்வுகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம், மேலும் இந்த நில அதிர்வின்  தன்மை குறித்த கூடுதல் தகவல்கள் எங்களிடம் இருக்கும் போது புதுப்பிப்போம் என்று நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியா நிலநடுக்கம்

இதேவேளை. அமெரிக்காவின் (USA) வடக்கு கலிபோர்னியாவின் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் கடந்த (5.12.2024) ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பெர்ன்டேலின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியின் 100 கி.மீ., தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version