Home இலங்கை சமூகம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறித்து கூறப்படும் இரட்டை விளக்கம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறித்து கூறப்படும் இரட்டை விளக்கம்

0

2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டங்களின்
விளக்கம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவும், நிதி அமைச்சமும் முரண்பட்ட
கருத்துக்களை கொண்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.

இதன்படி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, தமது நிதி ஆதாரங்களை யார்
கட்டுப்படுத்துகிறார்கள் என்பது குறித்து அரசாங்கத்துடன் வாதங்களை
முன்வைத்துள்ளது.

வலியுறுத்தல்

2023ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் மிகவும் சுதந்திரமான –
அதாவது நூறு சதவீதம் சுதந்திரமான செயற்பாட்டை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு
கொண்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் ரங்க திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி குறித்த சட்டத்தின் கீழ், நிதி அமைச்சருடன் கலந்தாலோசித்து, தமது
சொந்த வரவு செலவுத் திட்டத்தை தீர்மானிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது
என்று விளக்கப்படுகிறது.

கோரப்பட்ட தொகைகளை நாடாளுமன்றம் அங்கீகரித்தவுடன், அரசாங்கம் பணத்தை
ஆணைக்குழுவின் பிரத்தியேக நிதிக்கு மாற்ற வேண்டும்.

நிதி

இதனையடுத்து தலைமை கணக்கியல் அதிகாரியாக, ஆணைக்குழுவின் பணிக்காக இந்த
நிதியிலிருந்து செலவிட பணிப்பாளருக்கு அதிகாரம் உண்டு.
எனினும் நிதி அமைச்சகம், இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆணைக்குழுவின் அனைத்து பணியாளர்களின் சம்பளங்களும்; முதலில் அமைச்சரால்
அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சகம் வலியுறுத்துகிறது.

NO COMMENTS

Exit mobile version