Home இலங்கை அரசியல் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கம்! சம்பிக்க குற்றச்சாட்டு

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கம்! சம்பிக்க குற்றச்சாட்டு

0

மின்கட்டண தீர்மானத்தில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீன தலையீடு தடுக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஆணைக்குழுவின் அதிகாரங்கள்

வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள மின்சார சபை (திருத்தச்) சட்டமூலத்தில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை முழுமையாக பலவீனப்படுத்தும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவின் அதிகாரங்களை நிதியமைச்சு மற்றும் வலுசக்தி அமைச்சுக்கு பொறுப்பாக்கும் முயற்சிகள் இந்த சட்டமூலத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மின்கட்டண தீர்மானத்தில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீன தலையீடு தடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டது.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கு விலை நிர்ணயம் கொண்டு வரும் யோசனையை கொண்டு வந்தேன். இந்த யோசனைக்கு நிதியமைச்சு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

எரிபொருள் ஊடாக கிடைக்கும் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவே நிதியமைச்சு கட்டண நிர்ணயத்துக்கு அன்று எதிர்ப்பு தெரிவித்தது. அதன் பிரதிபலனை இன்று எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version