Home இலங்கை குற்றம் விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்

விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்

0

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது  புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி,  எதிர்வரும் 4ஆம் திகதி  வரை  அந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம்( Jaffna) நீதவான் நீதிமன்றம் இன்று(1) உத்தரவிட்டுள்ளது.

பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு 

பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இணுவில் பகுதியைச்
சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்றையதினம் குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பதில்
நீதவான் முன்னிலையில்
முற்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் வழக்கில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version