நோர்வே செஸ் சம்பியன்ஷிப் (Norway Championship 2024) போட்டியில் தமிழகத்தை சேரந்த பிரக்ஞானந்தா (Praggnanandhaa) 3ம் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
12வது நோர்வே செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவன்ஞர் நகரில் நடைபெற்றது இதில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின் ஆண்கள் பிரிவின் கடைசி சுற்றில் முன்னணி வீரரான நோர்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சென் அமெரிக்காவின் பேபியானோ கரோனாவிற்கு எதிராக மோதினார் இந்த போட்டி கிளாசிக்கல் சுற்றில் சமநிலையில் முடிந்து ஆர்கமெடானுக்கு சென்றது.
பாடையில் ஏறிய பல்கலைக்கழக பட்டம்: யாழில் கவனத்தை ஈர்த்த போராட்டம்
பிரக்ஞானந்தா மூன்றாவது இடம்
இந்நிலையில், போட்டியில் அபாரமாக செயல்பட்ட கார்ல்சென் 17.5 புள்ளிகளுடன் நோர்வே செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 6வது முறையாக கைப்பற்றினார்.
நகமுரா 15.5 புள்ளிகளுடன் 2வது இடமும், இந்தியாவின் பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் 3வது இடமும் பிடித்தனர்.
மேலும், மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 19 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி 12.5 புள்ளிகளுடன் 4-வது இடமும், கொனேரு ஹம்பி 10 புள்ளிகளுடன் 5-வது இடமும் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிச்சுற்றுக்கு தயாரான தமிழீழ அணி: மாவீரர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் வெற்றி
புலம்பெயர் தமிழ் வீராங்கனைகள் பங்கேற்கும் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |