Home இலங்கை குற்றம் பிரசன்ன ரணவீரவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பிரசன்ன ரணவீரவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிரிபத்கொடையில் உள்ள அரசாங்க நிலத்தை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக  பிரசன்ன ரணவீரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

விளக்கமறியல்

இந்தநிலையில், இன்று (7) காலை மஹர நீதவான் நீதிமன்றத்தில் அவர்  சரணடைந்த போதே தலைமை நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version