மட்டக்களப்பு (Batticaloa) – வாகரையில் (Vakarai) இறால் வளர்ப்பு திட்டம் தொடர்பாக பயனாளிகளைத் தெரிவு செய்யும் நேர்முகப் தேர்வினை நிறுத்துமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாகரை பிரதேச கடற்றொழில் அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், ஆலய அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் (12) மேற்கொண்டனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இன்று காலை 9 மணியளவில் உதவி மாவட்ட செயலாளர் தலைமையில் குறித்த நேர்முகத் தேர்வு நடைபெற்ற நிலையில், அவ்விடத்திற்கு சென்ற எதிர்ப்பாளர்கள் மக்களுக்கு பொருத்தமற்ற, மக்கள் விரும்பாத குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்தனர்.
மாணவர்களை மணிக்கணக்காக காக்க வைத்த சஜித்
நேர்முகத் தேர்வு
அத்துடன், உதவி மாவட்ட செயலாளர் குறித்த விடயம் தொடர்பாக தனது மேலதிகாரியான அரச அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியிருந்தார்.
மாவட்ட அரச அதிபர் இதனை நிறுத்தாமல் நேர்முகப் தேர்வினை நடாத்துமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து பயணாளிகள் தெரிவு தொடர்பான நேர்முகத் தேர்வு நடவடிக்கை இடம்பெற்றது.
நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் குதித்த அரச ஊழியர் சங்கம்
கவனயீர்ப்பு போராட்டம்
இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய அரச அதிபருக்கு வழங்கப்பட்ட தகவலின் படி இன்று குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டப்பட்டதாக உதவி மாவட்ட செயலாளர் தெரிவித்திருந்தார்.
இந்த நடவடிக்கையினை ஏற்றுக் கொள்ளாத போராட்டக்காரர்கள் தமது நியாயமான கோரிக்கையை முன் வைத்து கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
அபிவிருத்தி என்ற போர்வையில் வளங்களை அழிக்காதே, வாகரை மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே. ஆளுநரே மக்களின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளி, அழிவுகரமான இறால் வளர்ப்பை நிறுத்து. சூழலை அழிக்கும் இறால் வளர்ப்பு திட்டம் எங்களுக்கு வேண்டாம். என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
அநுராதபுரம் பாடசாலையில் உணவு ஒவ்வாமை: மாணவர்கள் பலர் பாதிப்பு
கொட்டாவை -மகும்புர பேருந்து நிலையத்தில் கோர விபத்து : ஐவர் படுகாயம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |