இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான
இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் ஆத்ம
சாந்திப் பிரார்த்தனைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா
குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகள்
நினைவாக ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
அந்தணர் ஒன்றியத்தின் ஆலோசகர் ஜெயந்திநாத குருக்கள் தலைமையில் இடம்பெற்ற
நிகழ்வில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து
கொண்டு ஆத்மசாந்தி வேண்டி தீபமேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
