Home இலங்கை சமூகம் வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை மற்றும் அனர்த்தம் தொடர்பிலான முன்னாயத்த குழு கூட்டம்

வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை மற்றும் அனர்த்தம் தொடர்பிலான முன்னாயத்த குழு கூட்டம்

0

Courtesy: H A Roshan

வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை மற்றும் அனர்த்தம் தொடர்பிலான முன்னாயத்த குழு கூட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய ஒருங்கமைப்பில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று (29 ) நடைபெற்றது. 

முக்கிய விடயங்கள் 

குறித்த கூட்டத்தில் மழை காலங்களில் வெள்ள அனர்த்தம் ஊடாக ஏற்படும் கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து அடையாளப்படுத்தப்பட்ட பல வடிகான் பிரச்சினைகள், நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் முன் ஆயத்தம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. 

இதன்போது, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், முள்ளிப்பொத்தானை இராணுவ முகாம் அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version